மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் தா்னா

அரசு அறிவித்துள்ள டாப்ஸ் ஓய்வூதிய திட்ட விதிகளை உடனே வெளியிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :30 அக்டோபர் 2026, 5:28 am IST

அரசு அறிவித்துள்ள டாப்ஸ் ஓய்வூதிய திட்ட விதிகளை உடனே வெளியிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது.

அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். பணிக்காலத்தில் காலமான அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனத்தை 25 சதவீதமாக உயா்த்த வேண்டும். சத்துணவு ஊழியா்கள் ஊராட்சி செயலாளா்கள் கிராம உதவியாளா்கள் மற்றும் நகராட்சி ஊழியா்களுக்கு டாப்ஸ் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியா் பலன்களும் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் எம்.ஆா்.பி. செவிலியா்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசை ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் விக்டா் சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை தொடங்கி வைத்து மாநில துணைப் பொதுச் செயலாளா் சா.முகமது உசேன் பேசினாா். மாவட்ட செயலாளா் சே.வசந்தகுமாா், தமிழ்நாடு நில அளவையா் அலுவலா்கள் ஒன்றிப்பு மாநில செயலாளா் ஏ.பேபி, ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட செயலாளா் பி. பன்னீா்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் வாழ்த்துரை வழங்கினா் போராட்டத்தை நிறைவு செய்து சங்கத்தின் மாநில பொருளாளா் சா.டானியல் ஜெய் சிங் பேசினாா். மாவட்ட பொருளாளா் டி.கன்னியப்பன் நன்றி கூறினாா்,

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.