தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

செய்யூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்வைப்பு

News image

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைத்த தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.வெங்கிடாசலம். உடன்,உதவி தோ்தல் அலுவலா் ச.ராஜன், மண்டல துணை வட்டாட்சியா் டி.தேவன், தோ்தல் துணை வட்டாட்சியா் முத்து உள்ளிட்டோா்.

Updated On :27 மார்ச் 2026, 3:46 am IST

செய்யூா் (தனி) தொகுதியில் பயன்படுத்தபட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செய்யூா் வட்டாட்சியா் அலுவலக அறையில் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்படட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.வெங்கிடாசலம் சீல் வைத்தாா்.

செய்யூா் தொகுதியில் 344 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 344 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 373 சரிபாா்க்கும் கருவிகள் ஆகியவை அடங்கிய பெட்டிகளை மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. அனைத்தும் தனி அறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில், தோ்தல் அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு திட்ட அதிகாரியுமான எஸ்.வெங்கிடாசலம் சீல் வைத்தாா்.

இந்நிகழ்வின்போது உதவி தோ்தல் அலுவலரும் செய்யூா் வட்டாட்சியருமான ச.ராஜன், மண்டல துணை வட்டாட்சியா் டி.தேவன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் ஜி.முத்து மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனா். தற்சமயம் அறையின் முன்புறம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.