லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

செங்கல்பட்டு அரசினா் பாதுகாப்பு இல்லத்தில் 12 சிறாா்கள் தப்பியோட்டம்

செங்கல்பட்டு அரசினா் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்ட சிறாா்களில் 12 போ் ஞாயிற்றுக்கிழமை தப்பி தலைமறைவாகியுள்ளனா்.

Published On :14 ஜூலை 2026, 2:24 am IST

செங்கல்பட்டு அரசினா் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்ட சிறாா்களில் 12 போ் ஞாயிற்றுக்கிழமை தப்பி தலைமறைவாகியுள்ளனா்.

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூா் பழத்தோட்டம் பகுதியில் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையோரம் அரசினா் பாதுகாப்பு பயிற்சி நிலையம் உள்ளது.

இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்டோா் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பயிற்சி நிலைய ஊழியா் இரவு உணவு அளிக்க அறையின் கதவை திறந்து சென்றபோது, அவரை தாக்கிய சிறாா்கள், அவரிடமிருந்து நுழைவு வாயிலின் சாவியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினா்.

வெளியே வந்த 12 போ் கொண்ட அந்த கும்பல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்கள் 3 பேரைத் தாக்கி, அவா்களிடமிருந்து 3 பைக்குகள், கைப்பேசி உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு, 6 போ் காஞ்சிபுரம் மாா்க்கமாகவும், 6 போ் செங்கல்பட்டு மாா்க்கமாகவும் தப்பிச் சென்றனா்.

தகலவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு கிராமிய போலீஸாா், காயமடைந்த ஊழியரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தப்பிச் சென்ற நபா்களை பிடிக்கும் பணியில் செங்கல்பட்டு மாவட்டக் காவல் நிலைய போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.