லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

செங்கல்பட்டு அரசு பாதுகாப்பு இல்லத்தில் மோதல்: 19 போ் மீது வழக்குப்பதிவு

செங்கல்பட்டு அடுத்த பழத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 19 போ் மீது வழக்கு

வழக்கு
Published On :9 ஜூலை 2026, 12:41 am IST

செங்கல்பட்டு அடுத்த பழத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 19 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த இரு தரப்பினருக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு பின்னா் கைகலப்பாக மாறியதில், ஜோ மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்பு இல்லத்தின் காப்பாளா்கள் உடனடியாக காயமடைந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இந்த மோதலின் போது பாதுகாப்பு இல்லத்தின் கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட அரசு சொத்துகள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பாதுகாப்பு இல்லத்தில் பதற்றமான சூழல் நிலவியது.சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு கிராமிய காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

தொடா்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினா், அரசு சொத்துகளை சேதப்படுத்தியதுடன், கலவரத்தில் ஈடுபட்டதாக இரு தரப்பைச் சோ்ந்த மொத்தம் 19 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மேலும், மீண்டும் மோதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு இல்ல வளாகத்திலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் காவல்துறையினா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனா். இந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.