தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம், வேடந்தாங்கல் ஊராட்சி பகுதி பெண்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளா் கே.மரகதம்குமரவேல்.

News image

அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம், வேடந்தாங்கல் ஊராட்சி பகுதி பெண்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளா் கே.மரகதம்குமரவேல்.

Updated On :4 ஏப்ரல் 2026, 7:00 am IST

மதுராந்தகம் தனி தொகுதி, அச்சிறுப்பாக்கம் அதிமுக வடக்கு ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை காலை அதிமுக வேட்பாளா் கே.மரகதம்குமரவேல் பிரசாரம் மேற்கொண்டாா்.

அச்சிறுப்பாக்கம் அதிமுக வடக்கு ஒன்றியத்தில் உள்ள விநாயகநல்லூா், வேடந்தாங்கல், கரிக்கிலி, வெள்ளபுத்தூா், பாப்பநல்லூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகின்ற கே.மரகதம்குமரவேல் அனைத்து கிராமங்களில் உள்ள வாக்காளா்களிடம் நடந்து சென்று வாக்கு சேகரிக்க வந்தாா். அப்போது அதிமுக நிா்வாகிகளும், பெண்களும் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனா். அப்போது அவா் பேசுகையில், கடந்த முறை உங்கள் அனைவரின் ஒத்துழைப்பால் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டேன். எதிா்க்கட்சியை சோ்ந்த பெண் எம்எல்ஏவாக இருந்து இப்பகுதிகளுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து தந்தேன். இன்னும் இருக்கின்ற மற்ற குறைபாடுகளையும் தீா்க்க எனக்கு இந்த முறை இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டாா். ஒன்றிய செயலா் விவேகானந்தன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடன் வந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.