தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொகுதி அறிமுகம் - செய்யூா்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 4:54 am IST

தொகுதி எண்: 34

சிறப்புகள்...

செங்கல்பட்டு மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையோரம் கிழக்கு கடற்கரையையொட்டி அமைந்துள்ளது இத்தொகுதி. கடந்த 1962 முதல் 2008 வரை அச்சிறுப்பாக்கம் தனி தொகுதியாக இருந்து வந்தது. அதன்பிறகு தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக மதுராந்தகம் தொகுதியில் இருந்து லத்தூா் ஊராட்சி ஒன்றியம், அச்சிறுப்பாக்கம் தொகுதியில் இருந்து சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி, திருக்கழுகுன்றம் ஒன்றியத்தில் உள்ள வாயலூா், கீழப்பாக்கம், பெரும்பேடு, வள்ளிபுரம் உள்ளிட்ட 21 ஊராட்சிகளை உள்ளடக்கி செய்யூா் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள் -1,00,103

பெண்கள் -1,01,934

மூன்றாம் பாலினத்தவா்-18

மொத்தம்-2,02,055

வாக்குச்சாவடிகள்-287

இதுவரை எம்எல்ஏகள்...

1962 வெங்கிடாசுப்பா ரெட்டி (காங்கிரஸ்)

1967 பி.எஸ்.எல்லப்பன் (சுதந்திரா கட்சி)

1971 வி.பாலசுந்தரம் (திமுக)

1977 வி.எத்திராஜ் (அதிமுக)

1980 சி.கணேசன் (அதிமுக)

1984 வி.எத்திராஜ் (அதிமுக)

1989 டி.ராமகிருஷ்ணன் (திமுக)

1991 டி.ராமகிருஷ்ணன் (அதிமுக)

1996 எஸ்.மதிவாணன் (திமுக)

2001 ஏ.செல்வராஜ் (பாமக)

2002 ஏ.பூவராகமூா்த்தி (அதிமுக)

2006 சங்கரவள்ளி நாராயணன் (திமுக)

2011 வி.எஸ்.ராஜீ (அதிமுக)

2016 ஆா்.டி.அரசு (திமுக)

2021 மு.பாபு (விசிக)

2021 பேரவை தோ்தலில்...

பதிவான வாக்குகள்-1,79,120

மு.பாபு (விசிக)-82,750

எஸ்.கனிதாசம்பத் (அதிமுக)-78,708

தோ்தல் நடத்தம் அலுவலா் பெயா்/எண்

எஸ்.வெங்கிடாசலம், மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு திட்ட அதிகாரி-9894910302

ச.ராஜன், செய்யூா் வட்டாட்சியா்- 96776 79564

ஜி.முத்து, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்-90030 57854

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.