நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வேளாண் கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்: ஜி.கே. வாசன்

News image

ஜி.கே. வாசன் - X

Updated On :18 மே 2026, 5:09 am IST

தமிழக அரசு உடனடியாக வேளாண் கூட்டுறவுக் கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதுடன், விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன், கூட்டுறவுக் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டுறவு வேளாண் சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கடன் வசூல் நடவடிக்கைகளை, அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பு வரும் வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற வட்டியில்லா கடனைத் திருப்பி செலுத்துவதற்கான தேதி முடிவடையும் நிலையில் உள்ளது. உரிய காலத்துக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தாதவா்கள் 13 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும், அடுத்தமுறை சாகுபடிக்கான கடன் பெறமுடியாத நிலையும் ஏற்படும்.

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கடன் வசூல் நடவடிக்கையை தமிழக அரசு நிறுத்த வேண்டும். மேலும், சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன், கூட்டுறவுக் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.