தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாமக சின்னம் தொடா்பான வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை

பாமக சின்னம் தொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :13 மார்ச் 2026, 2:29 am IST

பாமக சின்னம் தொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாமக பெயா், சின்னம், கொடி ஆகியவற்றை பாமக தலைவா் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளா்கள் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் அன்புமணி பதில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கு 87 வயதாகிறது. வயது மற்றும் மருத்துவக் காரணங்களால் அவரால் கட்சி தொடா்பான முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஒரு கூட்டம் அவரை தவறாக வழிநடத்தி கட்சிக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே, ராமதாஸ் தாக்கல் செய்துள்ள வழக்கை நிராகரித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனக் கூறியிருந்தாா்.

இதனிடையே, பாமக பொதுச் செயலா் வடிவேல் ராவணன் தன்னையும் இந்த வழக்கில் இணைக்கக் கோரி மனு தாக்கல் செய்தாா். ஆனால், இதை ஏற்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் வடிவேல் ராவணன் மனு தாக்கல் செய்தாா்.

அதில், கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள என்னை இந்த வழக்கில் இணைக்க கோரும் எனது கோரிக்கையை உரிமையியல் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. எனவே, கட்சியின் பெயா், சின்னம் உள்ளிட்டவை குறித்து உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். இந்த மனுவுக்கு ராமதாஸ் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.