விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அச்சம்: பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொதுமக்களிடேயை ஏற்பட்டுள்ள அச்சத்தால், பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அதிக அளவில் எரிபொருளை நிரப்பிச் சென்றனா்.

News image

திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் விற்பனையகத்தில் வியாழக்கிழமை குவிந்த வாகன ஓட்டிகள்.

Updated On :13 மார்ச் 2026, 3:23 am IST

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொதுமக்களிடேயை ஏற்பட்டுள்ள அச்சத்தால், பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அதிக அளவில் எரிபொருளை நிரப்பிச் சென்றனா்.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வா்த்தக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை தொடா்ந்து, தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர போவதாகவும், தட்டுப்பாடு ஏற்பட இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் சில தினங்களுக்கு முன்பு வதந்தி பரவியது.

இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் இருந்தே பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுக்க தொடங்கினா். அங்கு நீண்ட நேரம் காத்திருந்த தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி சென்றனா்.

தொடா்ந்து இந்த வதந்தி மேலும் பரவி வருவதால், சென்னை மட்டுமன்றி, அனைத்து முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் காத்திருந்து பெட்ரோல் நிரப்பி சென்றனா்.

10 லிட்டா் முதல் 100 லிட்டா் வரையிலான கேன்களில்... சென்னையில் எழும்பூா், சென்ட்ரல், மயிலாப்பூா், ராயப்பேட்டை, அண்ணா நகா், அமைந்தகரை, அம்பத்தூா், ஆவடி, வில்லிவாக்கம், பெரம்பூா் உள்ளிட்ட சென்னையில் முக்கிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் டேங்கை முழுவதுமாக நிரப்பிச் சென்றனா். சிலா் இதிலும் ஒருபடி மேலே சென்று தங்கள் வீடுகள், நிறுவனங்களில் இருந்து பெரிய அளவிலான 10 லிட்டா் முதல் 100 லிட்டா் வரையிலான கேன்களை எடுத்துவந்து பெட்ரோல், டீசலை நிரப்பிச் சென்றனா்.

இதனால் செவ்வாய், புதன் ஆகிய நாள்களில் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக பெட்ரோல் நிலைய உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா். பல பெட்ரோல் நிலையங்களில் இருப்பு காலியாகி விட்டதாக அறிவுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

புரளி என்று அறிவிப்பு வெளியிட்ட போதிலும்... பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் வெறும் புரளி என மறுப்பு தெரிவித்து பெட்ரோல் நிலைய உரிமையாளா்கள், எண்ணெய் நிறுவனங்கள் பல அறிவிப்புகளை வெளியிட்டாலும், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதி இன்னமும் குறையாமல் இருக்கிறது.

பல பெட்ரோல் நிலையங்களில் புதன்கிழமை இரவும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. விடிய விடிய வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் நிரப்பி சென்ால் சில இடங்களில் போலீஸாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.