தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மொராக்கோவின் முதல் பெண் பிரதமர் நியமனம்! அரபு உலகின் 2 ஆவது பெண் தலைவர்!

மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸ்ஸஹ்ரா எல் மன்சூரி நியமனம்...

Fatima Ezzahra El Mansouri

மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸ்ஸஹ்ரா எல் மன்சூரி நியமனம்... - AP

Published On :1 அக்டோபர் 2026, 3:06 am IST

மொராக்கோ நாட்டின் புதிய பிரதமராக, நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த பாத்திமா ஜஹ்ரா மன்சூரியை (50) அந்நாட்டு அரசா் முகமது நியமித்துள்ளாா்.

இதன்மூலம், இஸ்லாமிய நாடான மொராக்கோவில் பிரதமராகப் பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற வரலாற்றுச் சிறப்பை இவா் பெற்றுள்ளாா். மேலும், துனிசியாவின் நஜ்லா பெளடனுக்கு அடுத்தபடியாக, அரபு நாடுகளில் பிரதமா் பதவியை ஏற்கும் 2-ஆவது பெண் இவராவாா்.

மொராக்கோ தோ்தல் நடைமுறைப்படி எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைப்பது கடினமாகும். அதேநேரம் கடந்த 2011 அரபு வசந்தக்கால போராட்டத்தின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, தோ்தலில் அதிக இடங்களை வெல்லும் கட்சியிலிருந்தே பிரதமரை அரசா் நியமிக்க வேண்டும்.

அதன்படி, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில், அதிக வாக்குகளைப் பெற்ற பாத்திமா ஜஹ்ரா மன்சூரியின் ‘பிஏஎம்’ கட்சியைப் புதிய அரசு அமைக்க அரச மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. அடுத்த சில நாள்களில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, பாத்திமா ஜஹ்ரா மன்சூரி புதிய அரசை அமைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பாத்திமா ஜஹ்ரா மன்சூரி தலைமையிலான புதிய அரசு, நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஊதிய உயா்வு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுடன் 2030 ஃபிபா உலகக் கோப்பைக்கு நூற்றுக்கணக்கான கோடி டாலா் முதலீடுகளையும் முன்னெடுக்க வேண்டிய பெரும் பொறுப்புகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

King Mohammed VI of Morocco has appointed Fatima Ezzahra El Mansouri as the country's first female Prime Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.