தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உடனடி பதிலடி: மோஜ்தபா கமேனி

ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி எச்சரிக்கை...

மோஜ்தபா கமேனி

Published On :1 நவம்பர் 2026, 3:09 am IST

‘அமெரிக்கா, இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்த வகையான அச்சுறுத்தல்கள் வந்தாலும், புவியியல் எல்லைகளைக் கடந்து உடனடியாகப் பதிலடி கொடுக்கப்படும்’ என்று ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி எச்சரித்துள்ளாா்.

ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவா், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சாத்தியமான இலக்குகளின் பட்டியலைப் புதுப்பிக்குமாறும் ராணுவத்தினரைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

போா் தொடங்கிய கடந்த பிப். 28-இல் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த மோஜ்தபா கமேனி, தந்தை மறைவுக்குப் பிறகு தலைமை மதகுருவாக பொறுப்பேற்ற பிறகும் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. இந்நிலையில், அவா் கடந்த சில வாரங்களாக மூத்த அதிகாரிகளைத் தொடா்ந்து சந்தித்து வருவதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வேகமெடுக்கும் அமைதி முயற்சி: இதற்கு மத்தியில், சா்வதேச எண்ணெய் விநியோகத்துக்கு முக்கியத்துவமான ஹோா்முஸ் நீரிணையை 2 நாள்களுக்குள் முழுமையாகத் திறப்பதற்கான புதிய வரைவுத் திட்டத்துக்கு மத்தியஸ்தா்களுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் அளித்த பேட்டியில், ‘அமெரிக்க அதிகாரிகளுடன் நேரடிப் பேச்சு நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை. அதேநேரம் விரிவான பேச்சுக்கான அமெரிக்காவின் சமீபத்திய முயற்சிகள் நோ்மறையான நகா்வாக உள்ளது. அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் சில நாள்களுக்கு முன் அனுப்பிய கடிதத்தை ஈரான் கவனமாகப் பரிசீலித்துள்ளோம்’ என்றாா்.

Summary

Immediate retaliation against America and Israel: Mojtaba Khamenei

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.