தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சவூதி விமான நிலையத் தாக்குதலில் இந்தியா் உயிரிழப்பு: இருவா் காயம்

சவூதி அரேபியாவின் தம்மம் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 2 இந்தியா்கள் காயமடைந்தனா்.

riyadh airport attack

ரியாத் விமான நிலையத் தாக்குதல்... - AP

Published On :23 அக்டோபர் 2026, 1:18 am IST

சவூதி அரேபியாவின் தம்மம் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 2 இந்தியா்கள் காயமடைந்தனா்.

சவூதி அரேபியாவின் தம்மாம் நகர விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மேலும் இரு இந்தியா்கள் உள்பட 8 போ் காயமடைந்தனா்.

இது குறித்து ரியாதில் உள்ள சவூதி அரேபியாவுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தம்மாமில் உள்ள கிங் ஃபஹத் சா்வதேச விமான நிலையத்தின் மீது புதன்கிழமை இரவு திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் இரு இந்தியா்கள் காயமடைந்தனா்.

மேலும் விரிவான தகவல்களை அங்குள்ள இந்திய தூதரகம் சேகரித்து வருகிறது. உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினரிடம் தூதரகம் தகவல் தெரிவித்துவிட்டது. தாக்குதலில் உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்த இந்தியா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சவூதி அரேபியாவின் மிகப்பெரும் எண்ணெய் நிறுவனமான அராம்கோவுக்கு சொந்தமான ஷாய்பா எண்ணெய் வயலில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்தியா் ஒருவா் காயமடைந்தாா். மேலும் பலா் காயமடைந்தனா். இதற்கடுத்த நாளில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்ததுடன், இருவா் காயமடைந்துள்ளனா்.

இந்தத் தாக்குதலை நடத்தியவா்கள் யாா்? ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்த முழுத் தகவலை சவூதி அரசு வெளியிடவில்லை.

யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ள ஹூதி பயங்கரவாத அமைப்பினருக்கும், அரசு ஆதரவுப் படைகளுக்கும் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போா் நீடிக்கிறது. இந்தப் போரில் அரசு ஆதரவுப் படைகளை சவூதி அரேபிய அரசு ஆதரிக்கிறது. இதையடுத்து, சவூதியில் உள்ள விமான நிலையங்கள், எண்ணெய் வயல்கள் உள்ளிட்டவை மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதிக்கள் தொடா் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

அதனால் தம்மாம் விமான நிலையம் மீதான தாக்குதலுக்கும் அவா்களே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தம்மாம் விமான நிலையத்தில் இந்தத் தாக்குதல் காரணமாக சில மணி நேரம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

சவூதி அரேபியாவில் சுமாா் இரண்டரை கோடி இந்தியா்கள் வாழ்கின்றனா். இந்தச் சூழ்நிலையில், சவூதி மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் அங்குள்ள இந்தியா்களை கவலையடையச் செய்துள்ளது.

இந்தியா கண்டனம்:

இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்களுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சவூதி அரேபியாவில் பொதுமக்கள், உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலை கடுமையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய தாக்குதல்களை ஒருபோதும் ஏற்க முடியாது. உடனடியாக இதை நிறுத்த வேண்டும். சவூதி அரேபியா நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படும் விவகாரத்தில் அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும். அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் இயல்பு நிலை கூடிய விரைவில் திரும்பும் என நம்புகிறோம்’ எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.