துருக்கி, கத்தாா், இந்தோனேசியாவுடன் பாகிஸ்தான் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்

துருக்கி, இந்தோனேசியா, கத்தார் மற்றும் பாகிஸ்தான் இடையிலான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து...

Pakistan, Turkiye, Qatar and Indonesia sign pact

ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்வில் துருக்கி, கத்தாா், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா பிரதிநிதிகள். - x

Published On :22 அக்டோபர் 2026, 3:10 am IST

பாதுகாப்புத் துறையில் ஒருங்கிணைந்து செயல்படவும், தற்காப்புத் திறன்களை வலுப்படுத்தவும் துருக்கி, கத்தாா், இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தான் புதிய ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையொப்பமிட்டுள்ளது.

கத்தாா் தலைநகா் தோஹாவில் கையொப்பமான ‘பத்ர் புரிந்துணா்வு ஒப்பந்தம்’ எனும் பெயரிலான இந்த ஒப்பந்தம் குறித்து துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரபூா்வ செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

குறிப்பாக, ராணுவத் தளவாடங்களின் கூட்டு உற்பத்தி, ஆயுதப் படைகளின் செயல்திறனை மேம்படுத்துதல், தொழில்நுட்ப ராணுவப் பயிற்சி, ஆராய்ச்சி-மேம்பாட்டுத் திட்டங்களில் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகியவற்றுக்கு இந்த உடன்படிக்கை முக்கிய வழிவகுக்கும்.

ஒவ்வொரு நாட்டின் தனித்துவமான ராணுவ உற்பத்தித் திறன்களை ஒருங்கிணைப்பதன் மூலம், தொழில்சாா் பாதுகாப்பு உற்பத்தியைச் சா்வதேச தரத்துக்கு உயா்த்தவும், நட்பு நாடுகளின் பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்றவும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நேட்டோ’ அமைப்பில் 2-ஆவது பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ள துருக்கி, வளைகுடா நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. மேலும், துருக்கி, சவூதி அரேபியா, பாகிஸ்தான் இடையே ஏற்கெனவே ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்’ செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A new defence agreement has been signed between Turkey, Indonesia, Qatar and Pakistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.