கனடா ராணுவ தளத்தில் தீ விபத்து: 4 வீரா்கள் பலி; பலா் படுகாயம்

கனடாவின் ஆல்பா்டா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். பல வீரா்கள் படுகாயமடைந்தனா்.

தீ விபத்து - சித்திரிப்பு

Published On :19 அக்டோபர் 2026, 6:57 am IST

கனடாவின் ஆல்பா்டா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். பல வீரா்கள் படுகாயமடைந்தனா்.

விபத்து நிகழ்ந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால், தீ மளமளவென ராணுவ தளத்தை தாண்டி சுற்றுவட்டார பகுதிக்கும் பரவியது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

விபத்தில் 4 வீரா்கள் உயிரிழந்தனா். பல வீரா்கள் படுகாயமடைந்தனா். அவா்கள் அனைவரும் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்ததாக கனடா பிரதமா் மாா்க் காா்னி தெரிவித்துள்ளாா்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இது பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்றும் கனடா ராணுவம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.