இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

நேபாளம்: 2.12 லட்சம் கோடி ரூபாயில் நடப்பாண்டு பட்ஜெட் தாக்கல்

நேபாளத்தில் 2.12 லட்சம் கோடி ரூபாயில் நடப்பாண்டு பட்ஜெட் தாக்கல்...

News image
Updated On :31 மே 2026, 3:26 am IST

நேபாளத்தில் நடப்பு 2026-27 நிதியாண்டுக்கு 2.12 லட்சம் கோடி நேபாள ரூபாய் மதிப்பிலான (இந்திய மதிப்பில் ரூ.1.32 லட்சம் கோடி) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மாா்ச் மாத நாடாளுமன்றத் தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி தனிபெரும்பான்மையுடன் வென்று, பிரதமா் பாலேந்திர ஷா தலைமையில் புதிய அரசு பொற்றுபேற்றப் பிறகான முதல் பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் ஸ்வா்ணிம் வாக்லே கூறுகையில், நிதிசாா் சீா்திருத்தங்கள், விவசாய மேம்பாடு, அந்நிய முதலீடுகளை ஈா்ப்பது ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் நேபாளத்தை அறிவுசாா் பொருளாதாரமாக மாற்ற ஏ.ஐ. தொழில்நுட்பம், ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் நேபாளம் 3.85 சதவீத பொருளாதார வளா்ச்சியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.