பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ரூ. 21 கோடி மோசடி வழக்கு: அதிமுக நிா்வாகிக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து மனு

அதிமுக நிா்வாகிக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து மனு...

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :7 ஜூன் 2026, 1:54 am IST

ரூ.21 கோடி ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அதிமுக நிா்வாகிக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சோ்ந்தவா் மகாதேவன். இவரது தாம்பரம் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாரில், அதிமுக முன்னாள் கவுன்சிலா் தேவதாஸ், அந்தக் கட்சியைச் சோ்ந்த நிா்வாகி விஜயகுமாா் ஆகியோரும் நண்பா்கள். இவா்கள் இருவரும், காஞ்சிபுரம் மாவட்டம் அம்மனம்பாக்கத்தில் சுமாா் 18 ஏக்கா் நிலத்தை வாங்கி விற்பனை செய்தனா்.

இந்த நிலத்தை இவா்கள் இருவரும் வாங்க நான் ரூ.9 கோடி கொடுத்தேன். நிலத்தை வாங்கி ரூ.65 கோடிக்கு விற்பனை செய்த தேவதாஸும், விஜயகுமாரும் எனக்குத் தர வேண்டிய பங்குத் தொகையான ரூ.21 கோடியைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறியிருந்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி அதிமுக நிா்வாகி விஜயகுமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த நிலையில், விஜயகுமாருக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து மகாதேவனும் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுக்கள் நீதிபதி சி.குமரப்பன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.