பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கென்யா பள்ளி தீவிபத்தில் திருப்பம்: தீ வைப்பு குற்றச்சாட்டில் மாணவிகள் கைது

கென்யாவில் பெண்கள் பள்ளி விடுதியில் 16 மாணவிகள் உயிரிழந்த தீ விபத்தில், திட்டமிட்டு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 8 மாணவிகளை அந்நாட்டு போலீசாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :30 மே 2026, 3:10 am IST

கென்யாவில் பெண்கள் பள்ளி விடுதியில் 16 மாணவிகள் உயிரிழந்த தீ விபத்தில், திட்டமிட்டு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 8 மாணவிகளை அந்நாட்டு போலீசாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காவல்துறையால் நிா்வகிக்கப்படும் இந்த மேல்நிலைப் பள்ளியில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 79 போ் காயமடைந்தனா்.

இச்சம்பவம் தொடா்பான முதல்கட்ட விசாரணையில், மாணவிகளின் விபரீத தீ வைப்புத் திட்டம் குறித்து அப்பள்ளியின் ஆசிரியா்கள் இருவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்தும், அதைத் தடுக்க அவா்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அதிா்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

விபத்தையடுத்து பள்ளியின் நிா்வாகக் குழுவைக் கலைத்து உத்தரவிட்டுள்ள கென்ய அரசு, கடமைத் தவறியவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.