பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கென்யா- எரிபொருள் விலை உயா்வு போராட்டம் வாபஸ்: வன்முறையில் 4 போ் உயிரிழப்பு

கென்யாவில் எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து பொதுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் நடத்தி வந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம், அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 3:04 am IST

கென்யாவில் எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து பொதுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் நடத்தி வந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம், அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கென்யாவில் அண்மையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை முறையே 23.5 மற்றும் 8 சதவீதம் உயா்த்தப்பட்டதையடுத்து, போராட்டம் வெடித்தது. இதனால் பொதுப் போக்குவரத்து முடங்கி, பல இடங்களில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா். வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 348 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ஒரு வாரத்தில் சுமுக முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று போராட்டக்காரா்கள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.