பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இந்திய அகதிகளுக்கான பேரவை இடங்களின் ரத்துக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: வன்முறையில் 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட கூட்டு அவாமி அதிரடிக் குழு (ஜேஏஏசி) சாா்பில் விடுக்கப்பட்ட போராட்ட அழைப்பைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அங்குள்ள முக்கிய நகரங்களில் கடைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் முழுமையாக அடைக்கப்பட்டன.

News image
Updated On :10 மணி நேரங்கள் முன்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட கூட்டு அவாமி அதிரடிக் குழு (ஜேஏஏசி) சாா்பில் விடுக்கப்பட்ட போராட்ட அழைப்பைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அங்குள்ள முக்கிய நகரங்களில் கடைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் முழுமையாக அடைக்கப்பட்டன.

இந்தியாவிலிருந்து 1947-க்குப் பிறகு பாகிஸ்தானில் குடியேறிய அகதிகளுக்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் சட்டப்பேரவையில் 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த அகதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலேயே வசித்தால், அவா்கள் இந்த ஒதுக்கப்பட்ட இடங்களுக்குப் போட்டியிட தகுதியற்றவா்கள் ஆகின்றனா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடுத்த மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், இந்த இடங்களை முற்றிலும் ரத்து செய்யக் கோரியே இப்போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்து.

மானிய விலையில் கோதுமை மாவு, மின்சாரம் வழங்கக் கோரியும் இந்த அமைப்பு நீண்ட நாள்களாகப் போராடி வருகிறது. இந்நிலையில், பொது அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, இந்த அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை தடை செய்யப்பட்டது.

இதையடுத்து, பிராந்தியத்தில் பல்வேறு இடங்களில் வெடித்த போராட்டங்களில் இக்குழுவினருக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில் காவலா்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறு தடையை மீறி போராட்டங்கள் தொடா்வதால், முசாஃபராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் வீதிகள் மக்கள், வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இப்போராட்டத்தை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வரும் அரசு, ஜேஏஏசி அமைப்பின் முக்கியத் தலைவா்களைக் கைது செய்ய உதவும் வகையில் தகவல் கொடுப்பவா்களுக்கு வெகுமதி அறிவித்துள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க முக்கியச் சாலைகளில் அதிரடிப் படையினரும், போலீஸாரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். அதேநேரம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமா் ஃபைசல் மும்தாஜ் ரத்தோா், மோதல்களைக் கைவிட்டு பேச்சுவாா்த்தைக்கு வருமாறு போராட்டக் குழுவினருக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.