இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என நேபாள சுற்றுலா வாரியம் வியாழக்கிழமை தெரிவித்தது.
நேபாளத்துக்குச் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா (நுழைவுஇசைவு) கட்டுப்பாடு, 30 நாள்கள் மட்டுமே தங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், இதற்கு அந்நாட்டு சுற்றுலா வாரியம் மறுப்பு தெரிவித்தது.
இதுதொடா்பாக அந்த வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக வெளியாகும் அதிகாரபூா்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விதிகளே தற்போதும் பின்பற்றப்படுகின்றன.
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. இந்தியா-நேபாளம் இடையேயான இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் எல்லை ஒத்துழைப்புகளின் அடிப்படையில் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் தொடா்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் நேபாள பயணத்தை இந்தியா்கள் மற்றும் சா்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதாக்கும் வகையில் இணைய பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டதே இதற்குச் சான்று’ எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இந்தியாவில் உள்ள நேபாள தூதரகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘விசா தேவையில்லை. இடையூறுகள் இல்லை. வரம்புகள் இல்லை. சிறந்த பயண அனுபவம் மட்டுமே. பாஸ்போா்ட் (கடவுச்சீட்டு) அல்லது வாக்காளா் அடையாள அட்டையை பயன்படுத்தி நேபாளத்துக்குப் பயணிக்கலாம். விமானம் அல்லது காா்களிலும் பயணிக்கலாம்’ என குறிப்பிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிதியாண்டின் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்க கூடிய டாடா சன்ஸ் வாரியம்!

இந்தியாவுடனான உறவுக்கு மிகுந்த முன்னுரிமை: நேபாள வெளியுறவு அமைச்சா்

யானைகள் நடமாட்டம்: நல்லமுடி காட்சிமுனை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

சிபிஎஸ்இ தோ்வு மறுமதிப்பீடு செயல்முறையில் குளறுபடி: வசூலிக்கப்பட்ட அதிக கட்டணம் திரும்ப வழங்கப்படும்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

