தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை வாங்க இஸ்ரேல் ஒப்பந்தம்!

அமெரிக்காவிடமிருந்து இரு போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

News image

எஃப்-35 ரக போர் விமானங்கள் - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 4:50 pm IST

அமெரிக்காவிடமிருந்து இரு போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் நிறுவனங்களிடமிருந்து புதிய போர் விமானங்களை வாங்க இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இஸ்ரேலின் வான்வழிப் பாதுகாப்பு சார்ந்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் விதமாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

”இஸ்ரேல் இராணுவத்திற்கு ஒரு நீடித்த தரமான பாதுகாப்பு வழங்குவதற்காக எஃப்-35 மற்றும் எஃப்-15ஐஏ ரக விமானங்களைக் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் எந்த சூழலிலும் செயல்படுவதற்குத் தேவையான கருவிகள் மற்றும் வலிமையைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் மேலும் கூறினார்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கூட்டுத் தயாரிப்புத் திட்டமான எஃப்-35 ரக போர் விமானம், உலகின் மிகவும் தரம் வாய்ந்த இராணுவ விமானங்களில் ஒன்றாகும். இஸ்ரேல் ஏற்கனவே இந்த ரக விமானங்கள் பலவற்றை வைத்துள்ளது.

இஸ்ரேலின் விமானப்படை காஸா போரில் ஒரு முக்கியப் பங்காற்றியது. சமீபகால போர் வரலாற்றில் மிகத் தீவிரமான வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாக அது இருந்தது.

ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் இருந்த பல இடங்களை இஸ்ரேலின் ஏவுகணைகள் தாக்கி அழித்தன. ஆனால், அதிக மக்கள் அடர்த்தி கொண்ட அப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்களின் வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவையும் தாக்கி அழிக்கப்பட்டன.

அதுமட்டுமின்றி, ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் ஈரானுக்கு எதிராக இரண்டு போர்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. அதில், ஈரானின் மிக உள்ளார்ந்த பகுதிகளிலும் இஸ்ரேலின் ஏவுகணைகள் தீவிரமான தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இஸ்ரேல் சமீபத்தில் தனது 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறை செலவினங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கியுள்ளது.

இஸ்ரேல் மீது அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் போரைத் தொடங்கியது. அப்போது முதல், தனது இராணுவச் செலவினங்களை தொடர்ந்து இஸ்ரேல் அதிகரித்து வருகின்றது.

Summary

Israel approves deal to buy fighter jets from US govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.