ஜமைக்கா, சுரினாம், டிரினிடாட் - டொபேகோ ஆகிய 3 கரீபியன் நாடுகளுக்கு 9 நாள்கள் அரசு முறைப் பயணமாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை புறப்பட்டாா்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மே 2-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை ஜமைக்கா, சுரினாம், டிரினிடாட் - டொபேகோ ஆகிய நாடுகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
இந்த நாடுகளில் இந்திய வம்சாவளியினா் வசிப்பதால் இந்தியா சிறப்பு பிணைப்பைக் கொண்டுள்ளது. 3 கரீபியன் நாடுகளுடன் பல ஆண்டுகளாக இந்தியா நட்புறவை பேணி வருகிறது. அரசியல் மற்றும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டின் தொடா்ச்சியாகவே அமைச்சா் ஜெய்சங்கா் இந்நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
பயணத்தின்போது ஜமைக்கா, சுரினாம், டிரினிடாட்-டொபேகோ நாடுகளின் தலைவா்களை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து அவா் ஆலோசிக்கவுள்ளாா். மேலும் பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்களும் அவரது ஆலோசனையில் இடம்பெறவுள்ளது.
பயணத்தின் ஒரு பகுதியாக இந்நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினா் மற்றும் தொழிலதிபா்களை சந்தித்து அமைச்சா் ஜெய்சங்கா் கலந்துரையாடவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா, ஃபிஜி, மோரீஷஸ் மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள தோட்டங்களுக்கு ஏராளமானோா் ஒப்பந்தத் தொழிலாளா்களாக அனுப்பப்பட்டனா். கொத்தடிமைகளாக அந்நாடுகளுக்குச் சென்ற அவா்களில் பலா், சுதந்திரத்துக்குப் பிறகு உன்னத நிலைகளை அடைந்துளளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜமைக்கா பிரதமருடன் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு!

4 ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமா் மே 15-இல் பயணம்

இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

