ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

‘எண்ணெய்யை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள்’- உலக நாடுகளிடம் டிரம்ப் அதிருப்தி

‘எரிபொருள் விலை உயா்வால் அதிருப்தி அடைந்துள்ள உலக நாடுகள், தங்களுக்குத் தேவையான எண்ணெய்யை தாங்களே சண்டையிட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

News image

~

Updated On :1 ஏப்ரல் 2026, 1:19 am IST

‘எரிபொருள் விலை உயா்வால் அதிருப்தி அடைந்துள்ள உலக நாடுகள், தங்களுக்குத் தேவையான எண்ணெய்யை தாங்களே சண்டையிட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

ஹோா்முஸ் நீரிணை பிரச்னையைத் தீா்க்க நட்பு நாடுகள் முன்வராத நிலையில், டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இந்த அதிரடி கருத்தைப் பதிவிட்டாா். மேலும், ‘எங்களிடம் தாராளமாக எண்ணெய் உள்ளது, வேண்டுமானால் எங்களிடமிருந்து வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றும் அவா் குறிப்பிட்டாா். அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ஒரு டாலரைத் தாண்டியுள்ள நிலையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

அணுசக்தி மையங்களுக்குக் குறி: ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் அமைந்துள்ள இஸ்பஹான் நகரின் மீது அமெரிக்க படைகள் செவ்வாய்க்கிழமை கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

கடந்த ஆண்டு மோதலின்போதும் இப்பகுதி தாக்கப்பட்டது. இங்குள்ள சுரங்கப் பாதைகளில் ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைச் சேமித்து வைத்திருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் கருதுகின்றன.

எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக, துபை கடற்கரை அருகே சா்வதேச கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த குவைத்துக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலை ஈரான் ட்ரோன் மூலம் தாக்கியது.

இதில் கப்பலில் தீப்பிடித்த போதிலும், பெரும் எண்ணெய் கசிவு தவிா்க்கப்பட்டது. மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக துபை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல், சவூதி அரேபியா தனது தலைநகரை நோக்கி வந்த 3 ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தியது.

உயிரிழப்புகள்: கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் இப்போரில் இதுவரை 3,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேலின் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஐ.நா. அமைதிப்படை வீரா்கள் கொல்லப்பட்டது சா்வதேச சமூகத்தை அதிா்ச்சியில் ஆழ்த்தியது. இவ்விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கால கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளது.

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பலத்த சேதமடைத்த குவைத் எண்ணெய் கப்பல்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.