அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிர்ப்பலை பெரிதாக வீசுவதைத் தெளிவாகக் காட்டுகிறது ‘நோ கிங்ஸ்’ (‘அரசர்கள் வேண்டாம்’) போராட்டம்!
ஈரான் போர், அதனால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் வெளிப்பாடாக ‘அரசர்கள் வேண்டாம்’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் திரண்டு டிரம்ப் மீதான கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அமெரிக்கா எங்கிலும் சனிக்கிழமை (மார்ச் 28) வெவ்வேறு பகுதிகளில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. முன்னதாக, கடந்தாண்டில் ஜூன் மற்றும் அதன் தொடர்ச்சியாக அக்டோபரில் இரு முறை ‘நோ கிங்ஸ்’ போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் டிரம்ப்புக்கு எதிராக கடந்த மார்ச் 28-இல் நடத்தப்பட்ட நாடு தழுவிய போராட்டத்தில் சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றதாக போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னெசொட்டா பகுதியில் நோ கிங்ஸ் போராட்டக் களம் - AP
போராட்டக் களத்தில் கண்களுக்குப் புலப்பட்டவை என்னென்ன?
டிரம்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள்; வெளிநாடுகளிலிருந்து இடம்பெயர்வு ரத்து செய்ததற்கு எதிரான முழக்கங்கள்; ஈரானில் நடைபெறும் போருக்கு கண்டனக் குரல்கள்; இடம்பெயர்ந்தோருக்கான உரிமைகளுக்கு ஆதரவுக் குரல்கள்.
பாஸ்டன் பகுதியில் ‘நோ கிங்ஸ்’ போராட்டத்தில் 1.80 லட்சம் பேர் ஈடுபட்டனர். சிகாகோவில் சுமார் 2 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்தாண்டு அக்டோபரில் பாஸ்டனில் நடைபெற்ற இதே ‘நோ கிங்ஸ்’ போராட்டத்தில் ஈடுபட்டவர்களைவிட 1 லட்சம் பேர் கூடுதலாக மார்ச் போராட்டத்தில் ஈடுப்பட்டிருப்பது டிரம்ப்புக்கு எதிர்ப்பலை பெரிதாக வீசுவதைத் தெளிவாகக் காட்டுகிறது.
பாஸ்டனில் போராட்டத்தில் முன்னிலை வகித்த அம்மாகாண ஆளுநர் மௌரா ஹீலி போராட்டக்களத்தில் பேசும்போது, “அரசின் ஒவ்வொரு முகமையையும் விட்டுவைக்கமாட்டார் டொனால்ட் டிரம்ப். இந்தத் தேர்தலில் அவற்றை ஆயுதங்களாக்கி பயன்படுத்துவார் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். ஆகவே, ஒவ்வொருவரும் தொடர்ந்து போராட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கு இருக்கும் தளங்களைப் பயன்படுத்தி தங்கள் குரல்களை எழுப்ப வேண்டும். முக்கியமாக, தேர்தலில் தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும்” என்றார்.

ராக் இசைக்கலைஞர் ப்ருஸ் ஸ்பிரிங்ஸ்டீன் நோ கிங்ஸ் போராட்ட களத்தில் - AP
நியூ யார்க் சிட்டி, லாஸ் ஏஞ்சலீஸ், அட்லாண்டா, மின்னெபொலிஸ், மின்னெசொட்டா பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களும் நடிகையும் சமூக செயல்பாட்டாளருமான ஜேன் ஃபாண்டா, பாடகர் ஜோன் பேஸ், ராக் இசைக்கலைஞர் ப்ருஸ் ஸ்பிரிங்ஸ்டீன் உள்பட பிரபலங்களும் மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டது என ‘நோ கிங்ஸ்’ போராட்டம் வெள்ளை மாளிகைக்கு ஒருவித சமிக்ஞையைக் காட்டியுள்ளது.
அதிபருக்கு எதிரான போராட்டக்களத்தில் இருந்தவர்களின் மனக்குமுறல்கள் சில...
“உலகைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையும், இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதையும் பார்த்தால் பிரளயமாக இருக்கிறது.”
“மோசமான சட்டங்கள் இதற்கு முன் இருந்திருக்கின்றன. மோசமான அரசியல்வதிகளும் இருந்திருக்கின்றனர். அவற்றிலிருந்தெல்லாம் நம்மால் கடந்து வர முடிந்திருக்கிறதென்றால் நாம் ஒன்றுபட்டு இருந்தததனால்தான்.”
“போருக்கு திராக நாங்கள் இருக்கிறோம். டிரம்ப்போ அல்லது இஸ்ரேலோ ஈரான் மீது குண்டெறிந்து உள்கட்டமைப்புகளை அழித்து, எல்லாவற்றையும் அழித்தலை நாங்கள் விரும்பவில்லை.”
“டிரம்ப் செய்வதையெல்லாம் பார்த்தால்.. அமெரிக்கர்களிடமிருந்து பறித்து தன்னை பணக்காரராக வைத்துக்கொள்வதில் கெட்டிக்காரராக இருக்கிறார். எரிவாயு எங்கோ சென்றுவிட்டது. இப்போது மக்கள் சாப்பிடுவதற்குக்கூட வழியில்லை.”
“பாசிசவாதியாக தெரிகிறார். இதை எதிர்த்து நாம் போராட வேண்டும். இல்லையென்றல் நமது நாட்டை இழந்துவிடுவோம்.”
“சமூகப் பாதுகாப்பையும் மருத்துவ உதவிகளையும் பறிக்க டிரம்ப் முயற்சிக்கிறார்.”
“எதிர்காலத்தில் இன்னும் அதிக போரட்டங்கள் நடைபெற்றால் அவற்றிலும் ஈடுபடத் தயார்”
“இந்த நாட்டுக்கும் உலகத்துக்கும் சிறந்தது யாதெனில், அது, டிரம்ப் பதவியிலிருந்து விலகலே!” என்று போராட்டக்கரர்கள் தெரிவித்தனர்.

விச்சிடா பகுதியில் நோ கிங்ஸ் போராட்ட களம் - AP
டிரம்ப்புக்கு எதிர்ப்பலை பெரிதாக வீசுவதைத் தெளிவாகக் காட்டுகிறது ‘நோ கிங்ஸ்’ போராட்டம்!
Summary
No Kings rallies a warning against rising authoritarianism under U.S. President Donald Trump’s administration
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
முடியும் தறுவாயில் அமெரிக்கா - ஈரான் போர்; ஆனால், இன்னும் முடிவடையவில்லை: டிரம்ப்
ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரை

விரைவில் வெளியேறுவோம்; ஈரான் போருக்கு 2, 3 வாரங்களில் தீர்வு! - டிரம்ப்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
