அமெரிக்க அரசு போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையிலும் ஈரானில் தரைவழித் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருவதாக ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி ஒரு மாதத்தை கடந்த நிலையில் கலிபாஃப் அமெரிக்காவின் தந்திரமான நடவடிக்கை பற்றி பேசியுள்ளார்.
உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குரவத்துக்கான கடல்வழியான கோர்முஸ் நீரிணை போரின் காரணமாக வெகு சில நாடுகள் தவிர்த்து பெரும்பாலான நாடுகளுக்கு மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று ஈரான் நாடாளுமன்றத்தில் பேசிய அவைத் தலைவர் முகமது பாகேர் கலீபாஃப், “நமது எதிரி பொதுவில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான செய்திகளை அனுப்பிக்கொண்டே தரைவழித் தாக்குதலுக்குத் திட்டமிட்டு வருகின்றனர்.
அமெரிக்க ராணுவ வீரர்கள் இங்கு வந்தால் அவர்களை தீயிட்டுக் கொளுத்தி நிரந்தரமாக தண்டிப்பதற்கு நமது வீரர்கள் தயாராக உள்ளனர்” என்று அவர் பேசினார்.
மேலும், “நாம் மிகவும் நெருக்கடியான காலத்தில் மிகப்பெரிய உலகளாவியப் போரை எதிர்கொண்டுள்ள நிலையில் ஈரானியர்களான நாம் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்.
அமெரிக்காவைத் தண்டித்து ஈரானை தாக்கியதற்காக அவர்களை வருந்தச் செய்து நமது உரிமைகளை நிலைநாட்ட நாம் உறுதியாக உள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
Iran parliament speaker says US plots ground attack despite diplomatic efforts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போர் நிறுத்தம்! ஈரான் - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம்!
அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!

போர்நிறுத்தம் கோரவில்லை; அமெரிக்கா தண்டிக்கப்படும் வரை போர் தொடரும்! - டிரம்ப்புக்கு ஈரான் பதிலடி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
