உலகளவில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாக சிறந்த சமாதானத் தூதராக விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக கடந்த பிப்.28 ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. அதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தியது.
இந்த நிலையில், போரின் ஒரு வியூகமாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதன் மூலம் ஈரான் சில நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்த அனுமதி அளித்தது. அந்த நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. அனுமதி அளிக்கப்பட்டாலும் வழக்கத்தைவிட குறைந்த அளவிலான கப்பல்களே ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கின்றன. இதனால் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்ப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் முக்கிய நகரமான மியாமியில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு முயற்சி என்னும் (FII) உச்சிமாநாட்டில் டிரம்ப் உரையாற்றினார். அதில், மேற்கு ஆசிய போர் குறித்து பேசுகையில், "ஈரானுடனான எல்லா ஒப்பந்தத்திலும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஒரு நிபந்தனையாக உள்ளது. அதேவேளையில், எண்ணெய் ஏற்றுமதிக்கான கடல்வழிப் போக்குவரத்து மீட்டெடுக்கப்பட வேண்டும்.
நாங்கள் இப்போது ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். எங்களால் ஏதாவது செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் ஈரான் அதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
நான் இதுவரை 8 போர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளேன்.முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. தாக்குதல்கள் தொடர்ந்தால் அமெரிக்கா 250% வரி விதிக்கும் என்று கூறி அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தேன்” எனத் தெரிவித்தார்.
Summary
US President Donald Trump has said that he wants to be a great ambassador of peace because he has ended eight wars worldwide.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கை
தவறாக நடந்துகொண்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்கள் தொடங்கும்: டிரம்ப் எச்சரிக்கை
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


