தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சௌதி அரேபியா - உக்ரைன் இடையே வான் பாதுகாப்பு ஒப்பந்தம்!

சௌதி அரேபியா மற்றும் உக்ரைன் இடையே வான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறித்து...

News image

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி - சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்... - எக்ஸ்

Updated On :27 மார்ச் 2026, 4:58 pm IST

சௌதி அரேபியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே வான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

உக்ரைனின் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி அரசு முறைப் பயணமாக சௌதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில், சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அவர் நேரில் சந்தித்து உரையாடினார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக சௌதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அவர்களின் ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்தத் தாக்குதலில், ஈரான் வீசும் ட்ரோன்களை இடைமறித்து தகர்க்க, 4 ஆண்டுகளாக ரஷியா உடன் நடைபெற்று வரும் போரில் உக்ரைன் பயன்படுத்தி வரும் வான் பாதுகாப்பு அமைப்புகள் வளைகுடா நாடுகளில் களமிறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரானிய ட்ரோன்களை இடைமறிக்க வளைகுடா நாடுகள் வீசும் மிக அதிக விலை கொண்ட ஏவுகணைகளுக்குப் பதிலாக உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்த வேண்டுமென அதிபர் ஸெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார். மேலும், வளைகுடா நாடுகளின் ஏவுகணைகளை ரஷியாவுக்கு எதிரான போரில் பயன்படுத்த அவர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சௌதி அரேபியா மற்றும் உக்ரைன் இடையில் வான் பாதுகாப்பு அமைப்பைக் கட்டமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) அன்று கையெழுத்தானதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், சௌதி அரேபியாவில் களமிறக்கப்பட்டுள்ள உக்ரைனின் வான் பாதுகாப்பு நிபுணர்களையும் அவர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

ஏற்கெனவே, சௌதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முக்கிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

An air defense agreement has been signed between Saudi Arabia and Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.