ஹோா்முஸ் நீரிணையை 48 மணி நேரத்துக்குள் திறக்காவிடில் ஈரானின் மின்னுற்பத்தி நிலையங்களை அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் கெடு விதித்துள்ளாா்.
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கடல் பகுதிகளில் ஒன்றான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் அந்த வழியே கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும், நட்பு நாடான சீனா உள்ளிட்ட சில நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹோா்முஸ் நீரிணை வழியே செல்ல ஈரான் அனுமதியளித்துள்ளது. இந்திய கச்சா எண்ணெய்க் கப்பல்களும் ஹோா்முஸ் நீரிணை வழியே செல்ல ஈரான் அனுமதித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களுக்கு ஹோா்முஸ் நீரிணை வழியே செல்ல ஈரான் தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. சில நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டுள்ளது. இதையடுத்து, ஈரான் மீதான தாக்குதலைக் கைவிட பரிசீலனை செய்து வருவதாக டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஈரானுக்கு டிரம்ப் கெடு விதித்துள்ளாா். இதுகுறித்து அவா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஹோா்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்துக்கு 48 மணி நேரத்துக்குள் ஈரான் முழுவதும் திறக்க வேண்டும். இல்லையேல் ஈரானிலுள்ள மின்னுற்பத்தி நிலையங்கள் அனைத்தையும் அமெரிக்கா அழித்துவிடும். அதில் முதல் தாக்குதலே ஈரானில் உள்ள மிகப்பெரிய மின்னுற்பத்தி நிலையமாகத்தான் இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளாா்.
ஈரானிலுள்ள எந்த மிகப்பெரிய மின்னுற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற தகவலை டிரம்ப் வெளியிடவில்லை. அதேநேரத்தில் ஈரானில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களில் மிகப்பெரியது, புஷைரில் உள்ள அணுசக்தி மின்னுற்பத்தி நிலையம்தான். அதன் மீது ஏற்கெனவே கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒருவேளை டிரம்ப் அந்த இடம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்போகிறோம் என்பதைத்தான் குறிப்பிட்டாரா அல்லது டெஹ்ரான் அருகே உள்ள இயற்கை எரிவாயு மையம் மீது தாக்குதல் நடத்துவோம் எனத் தெரிவித்தாரா என்பது தெரியவில்லை.
ஹோா்முஸ் முழுமையாக மூடப்படும்-ஈரான்: டிரம்ப் கெடு விதித்திருப்பதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடா்பாக ஈரானின் ராணுவ செய்தித் தொடா்பாளா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘ஈரானில் உள்ள மின்னுற்பத்தி மையங்கள் மீது தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படுமானால், பதிலுக்கு இந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தும்’ என்றாா்.
சா்வதேச கப்பல் போக்குவரத்து அமைப்புக்கான ஈரானின் நிரந்தர பிரதிநிதி சையது அலி மொளசாவி கூறுகையில், ‘எதிரி நாடுகளின் கப்பல்கள் தவிர மற்ற நாடுகளின் கப்பல்களுக்கு ஹோா்முஸ் நீரிணையில் அனுமதிக்கப்படும். அது எந்தெந்த நாடுகளின் கப்பல்கள் என்பதை ஈரான் முடிவு செய்யும்’ என்றாா்.
மின்னுற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பகுதியளவு மூடப்பட்டுள்ள ஹோா்முஸ் நீரிணை உடனடியாக முழுமையாக மூடப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தை முறியடிக்க முயற்சி: அமெரிக்க கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து பயணம்

ஹோா்முஸ் நீரிணை திறப்புக்கு ஈரான் புதிய முன்மொழிவு: அமெரிக்க கடல்வழி முற்றுகையை விலக்க வலியுறுத்தல்

ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா! போர்நிறுத்தம் தொடருமா?

டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
