ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரான் சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதனை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரான் கொடியுடன் வந்த சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அதனைச் சிறை பிடித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்தம் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கிடையே மோதல் மீண்டும் தீவிரமடையும் நிலை உருவாகியுள்ளது.
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை நடவடிக்கையின் தொடர்ச்சியாக அமெரிக்கப் போர்க்கப்பலின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்த ஈரானின் 'டௌஸ்கா' என்ற கப்பல் ஓமன் ஹோர்முஸ் நீரிணையில் வழிமறிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அந்தக் கப்பல் தாக்கப்படும் விடியோ காட்சிகளை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை ’கடல் கொள்ளை’ என்றும், போர்நிறுத்த விதிமீறல் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி, ஈரான் கப்பல்கள் மற்றும் துறைமுகங்களுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் அவர்களின் மோசமான நோக்கங்களையும், போர்நிறுத்தத்தில் அக்கறையின்மையையும் காட்டுவதாகத் பாகிஸ்தானின் உயர்மட்ட தூதரிடம் தெரிவித்தார்.
போர்நிறுத்தம் தொடர்பான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், இரு நாடுகளும் தங்களின் நிலைப்பாட்டை கடுமையாக்கி வருகின்றனர். போர்நிறுத்தம் தொடர்பாக வரும் நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுமா அல்லது போர் மீண்டும் தொடருமா என்பது தற்போதைய மோதல் தொடர்பாக இரு நாடுகளும் அளிக்கும் பதில்களை பொறுத்தே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
US Seizes Iranian Ship! Will the Ceasefire Continue?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போர்நிறுத்தத்தை நீட்டித்த டிரம்ப்! 2 கப்பல்களைத் தாக்கிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

