கத்தார் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால், ஈரானில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிவாயு வயலாகக் கருதப்படும் சௌத் பார்ஸ் எரிவாயு வயல் மீது புதன்கிழமை (மார்ச் 18) இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்த நிலையில், கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு மையத்தின் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் எண்ணெய்க் கப்பல்கள் பயணிக்க முடியாமல் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், கத்தார் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் ஈரானில் உள்ள சௌத் பார்ஸ் எரிவாயு வயல் முழுவதுமாகத் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஈரானின் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Trump has warned that the world's largest gas field in Iran will be destroyed if attack on Qatar continues.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்டு ரூ.2,200 கோடி முதலீடு: தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்காது! டிரம்ப் எச்சரிக்கை

உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


