காஸாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் வான் வழி தாக்குதல்களில் கர்ப்பிணியொருவர், அவரது மகன் உள்பட மொத்த 12 பேர் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 15) கொல்லப்பட்டனர்.
இன்று காலை மத்திய காஸாவில் நுசெய்ராட் பகுதியிலுள்ளதொரு நிவாரண முகாம் மீது இஸ்ரேல் விமானப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், 4 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த நிவாரண முகாமில் இருந்த 30 வயது பருவ இளம் தம்பதியரும் அவர்களது 10 வயது மகனும் இந்தத் தாக்குதலில் மாண்டனர். உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்குள்படுத்தியதில், அவர் கர்ப்பமாகவிருந்ததும் அவரது கருவில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்ததையும் அல்-அப்சா மார்டைர்ஸ் மருத்துவமனை நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது. அப்பகுதியிலிருந்து 15 வயது சிறுவனொருவரும் இந்தத் தாக்குதலில் பலியானார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, பகல் வேளையில் ஸவைடா மத்திய நகரில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் 8 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
மேற்கண்ட தாக்குதல்களில் 14 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Israeli strikes killed 12 in Gaza, including 2 children and pregnant woman
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் போரில் இதுவரை 3,300 பேர் பலி!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
