தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!

அமெரிக்கா கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யை விடுவிப்பது பற்றி...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - IANS

Updated On :13 மார்ச் 2026, 9:11 am IST

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா அவசரகால கையிருப்பில் வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யில் 17 கோடி பீப்பாய்களை விடுவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.

மேலும், தடையை மீறி செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைக் கடந்து விற்பனையாகி வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் ஏற்கெனவே விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் அமெரிக்காவின் அவசரகால கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யில் 17 கோடி பீப்பாய்களை சந்தையில் விடுவிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவால் 71 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை சேமிக்க முடியும். தற்போது கையிருப்பில் 41 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சேமித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Fuel shortage! America releases 170 million barrels of crude oil!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.