தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போர்க் கூட்டணி? சௌதி அரேபியா செல்கிறார் பாக். பிரதமர்!

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் சௌதி அரேபியாவுக்குச் செல்வது குறித்து...

News image

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் - சௌதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (கோப்புப் படம்) - எக்ஸ்

Updated On :12 மார்ச் 2026, 5:23 pm IST

வளைகுடா நாடுகளில் போர் நடைபெற்று வரும் சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அரசு முறைப் பயணமாக சௌதி அரேபியாவுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, சௌதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

சௌதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப், ஒரு நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை (மார்ச் 12) அந்நாட்டுக்குச் சென்றுள்ளார்.

சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று இந்தப் பயணத்தை பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மேற்கொண்டுள்ளதாக, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பில், வளைகுடா நாடுகளிடையே நிலவும் பதற்றமான சூழல் குறித்தும், இருநாடுகளின் உறவுகள் குறித்தும் சௌதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் ஷரீஃப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2025 செப்டம்பரில், சௌதி அரேபியா மற்றும் அணு ஆயுத சக்தி கொண்ட பாகிஸ்தான் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்ததின் அடிப்படையில், இருநாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான தாக்குதல் மற்றொன்றின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Pakistani PM Shahbaz Sharif has visited Saudi Arabia on a state visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.