அமெரிக்காவில் ரிலையன்ஸ் நிறுவன முதலீட்டுடன் நாட்டின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில், ’’அமெரிக்கா மீண்டும் தனது உண்மையான எரிசக்திக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. டெக்ஸாஸின் பிரௌன்ச்வில்லில் 50 ஆண்டுகளில் முதல் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறக்கவுள்ளது.
300 பில்லியன் டாலருடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்று ஒப்பந்தம் - அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரியது; அமெரிக்க தொழிலாளர்கள், எரிசக்தி மற்றும் தெற்கு டெக்ஸாஸ் மக்களின் வெற்றி.
டிரம்ப்புடன் அம்பானியின் ரிலையன்ஸ் - Truth Social
இந்த முதலீட்டுக்காக இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கும் அவர்களின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் நன்றி.
அமெரிக்காவில் அனுமதி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டது மற்றும் வரிகளைக் குறைத்த காரணங்களாலேயே பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் மீண்டும் நமது நாட்டுக்கே ஈர்க்கப்பட்டுள்ளன.
பிரௌன்ஸ்வில் துறைமுகத்தில் அமையவுள்ள இந்தப் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அமெரிக்க சந்தைகளுக்கு புதிய ஆற்றலாகவும், நமது தேசிய பாதுகாப்பையும் வலுப்படுத்தும்; அமெரிக்காவின் எரிபொருள்கள் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும், பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள பொருளாதாரப் பலன்களும் வரக் கிடைக்கும்.
உலகிலேயே மிகவும் தூய்மையான சுத்திகரிப்பு நிலையமாக இது திகழ்வதுடன், உலகளாவிய ஏற்றுமதியையும் வலுப்படுத்தும். ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுடன், பொருளாதார வளர்ச்சியையும் தரும்.
எரிசக்தித் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம் தொடங்கி விட்டது. அமெரிக்காதான் எப்போதும் முதலில்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Summary
US President Donald Trump announces historic $300 billion oil refinery in Texas, thanks Reliance
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!
வங்கிக் கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாகிகளுக்கு மே 2 வரை நீதிமன்றக் காவல்

தீக்கிரையான அமெரிக்க வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! தாக்குதல் நடத்தப்பட்டதா?

அமெரிக்காவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - ரிலையன்ஸ் ரூ.28 லட்சம் கோடி முதலீடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

