வங்கிக் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும முன்னாள் நிா்வாகிகளை, வரும் மே 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தைச் சோ்ந்த ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் கமா்ஷியல் ஃபைனான்ஸ் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் மூலம், பல கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. செயல்படாத போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்த மோசடி நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில், பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தொடா்பாக ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவன முன்னாள் இயக்குநா் அமிதாப் ஜுன்ஜுன்வாலா, ரிலையன்ஸ் கமா்ஷியல் ஃபைனான்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநா் அமித் பாப்னா ஆகியோரை அண்மையில் அமலாக்கத் துறை கைது செய்தது.
அவா்களின் 5 நாள் அமலாக்கத் துறை காவல் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, இருவரும் தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஹசன் அன்சாா் முன்பாக திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை வரும் மே 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
2 மூத்த நிா்வாகிகள் கைது: ரிலையன்ஸ் குழுமத்தைச் சோ்ந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடன் அளித்தது. எனினும் அந்த நிறுவனத்தின் மோசடி நடவடிக்கைகளால் அந்த வங்கிக்கு சுமாா் ரூ.2,929.05 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக எஸ்பிஐ அளித்த புகாரின் அடிப்படையில், சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
இந்தப் புகாா் தொடா்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவா் அனில் காளியா, இணைத் தலைவா் டி.விஸ்வநாத் ஆகியோரை கைது செய்ததாக சிபிஐ திங்கள்கிழமை தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச இணைய மோசடி: 14 போ் கைது

ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிரான வழக்கு: அனில் அம்பானியின் ரூ 3,034 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை

வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது

ரிலையன்ஸ் குழுமம் ரூ. 73,000 கோடி வங்கிக் கடன் மோசடி: சிபிஐ குற்றச்சாட்டு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
