லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி

‘அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்

டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Published On :27 ஜூன் 2026, 12:07 am IST

‘அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளாா். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடியாக அவா் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைத்து, அவற்றின் எண்ம சேவைகளுக்கு சில ஐரோப்பிய நாடுகள் உடனடியாக வரி விதிக்க ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

அவ்வாறு அமெரிக்க நிறுவனங்கள் மீது எந்தவொரு நாடு எண்ம சேவை வரியை விதித்தாலும், அதற்குப் பதிலடியாக அந்நாட்டின் அனைத்து இறக்குமதிப் பொருள்கள் மீதும் உடனடியாக 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும்.

இந்த புதிய வரியானது, அந்தந்த நாடுகளுடன் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து வா்த்தக ஒப்பந்தங்களையும் மீறி விதிக்கப்படும். எண்ம வரி விதிப்பை நடைமுறைப்படுத்தும் எந்தவொரு நாட்டுக்கும் இது பொருந்தும்’ எனக் குறிப்பிட்டாா்.

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபா் டிரம்ப் விடுத்துள்ள இந்த நேரடி எச்சரிக்கை, உலகளாவிய வா்த்தக சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.