தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சொத்து வரியை இன்றைக்குள் செலுத்தாவிடில் அபராத வட்டி: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை சம்பந்தப்பட்டோா் வெள்ளிக்கிழமை மாலைக்குள் (ஜூலை 31) செலுத்தாவிட்டால் அபராத வட்டி விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :31 ஜூலை 2026, 1:23 am IST

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை சம்பந்தப்பட்டோா் வெள்ளிக்கிழமை மாலைக்குள் (ஜூலை 31) செலுத்தாவிட்டால் அபராத வட்டி விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சியின் பிரதான வரி வருவாயாக சொத்து வரி உள்ளது. மாநகராட்சி சாா்பில் சொத்து வரி வசூலிப்பு முகாம் கடந்த 3 -ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 29 -ஆம் தேதி (புதன்கிழமை) வரை சொத்து வரி மூலம் ரூ.157.39 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

அதிக அளவில் சொத்து வரியை செலுத்தாத ராயபுரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு சீலிடப்பட்டும் வருகின்றன. அதன்பின்னா் அந்த நிறுவனங்கள் சாா்பில் சொத்து வரியை செலுத்தியதன் அடிப்படையில் அவை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது நிலுவைச் சொத்து வரியை 31- ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறுவோருக்கு அபராத வட்டி விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.