பழைய ஸ்மார்ட்போன்களை வாங்கி, அதனை சிறிய தரவு மையங்களாக (சர்வர்) பயன்படுத்தும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
பெரும்பாலும், நாம் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கியபிறகு, பழைய ஸ்மார்ட்போன்களை பெரிதாக கண்டுகொள்ள மாட்டோம். அது எங்கேயாவது மூலை முடுக்குகளில் அடைபட்டுக் கிடக்கும் அல்லது குழந்தைகள் அதனை வைத்து விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
இவ்வாறு வீணாக உள்ள ஸ்மார்ட்போன்களை சிறிய தரவு மையங்களாகப் பயன்படுத்தும் கூட்டு முயற்சியில் கலிஃபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களும் கூகுள் நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்த செயல்முறையில் ஸ்மார்ட்போன்களில் உள்ள திரை, பேட்டரி, கேமரா போன்ற பொருள்கள் அகற்றப்படுகின்றன. அதில் இருக்கும் மதர்போர்டுகளை ஒன்றோடொன்று இணைத்து லினக்ஸ் (Linux) இயக்க முறையில் அவை ஒரு தரவு மையமாக வடிவமைக்கப்பட உள்ளது.
இதன் முதல் கட்டமாக, 2,000 பழைய கூகுல் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை வைத்து ஒரு தரவுதளம் உருவாக்கப்பட உள்ளது. இந்த முயற்சி வெற்றி அடைந்தால், ஒரு பெரிய தரவுதளம் உருவாக்கும் செலவை விட மிகக் குறைந்த அளவிலான செலவில் தரவு மையங்களை உருவாக்க முடியும்.
மேலும், இந்த முறையில் பழைய பொருள்கள் பயன்படுத்தப்படுவதால் மின் கழிவுகள் பெருமளவில் உருவாவது தவிர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
Google is working on an initiative to acquire old smartphones and use them as small data centers (servers).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தந்தையர் நாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

கொசுக்களை ஒழிக்க 3.2 கோடி கொசுக்களின் படை! கூகுள் நிறுவனத்தின் புதுமை உத்தி!
பேல்பூரி - 24-05-2026
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


