லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இ. மெயில்களை எழுதுவதில் செயற்கை நுண்ணறிவு

கூகுள் நிறுவனம் தனது பல்வேறு செயலிகளுக்கு புதிய சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.

Published On :26 ஜூலை 2026, 4:04 pm IST

கூகுள் நிறுவனம் தனது பல்வேறு செயலிகளுக்கு புதிய சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது இ. மெயில்களை எழுதுவதில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சேவையை புதிதாக அளித்துள்ளது.

கூகுள் இ.மெயிலில் உள்ள 'ஹெல்ப் மி ரைட்' எனும் சேவையில் கூகுள் ஜெமினி ஏ.ஐ. புகுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மிக எளிதில் இ. மெயில்களில் கடிதங்களை எழுத உதவும். கடிதங்களை எழுதும் முன்பே அதற்கான வார்த்தைகளை ஜி. மெயில் வழங்கி வந்தது. தற்போது கடிதங்களில் சேர்க்க வேண்டியவற்றை 'பிராம்ட்' எனும் கட்டளையிட்டு மாற்றம் செய்து கொள்ளலாம். நமது இ. மெயிலுக்குத் தேவையான விவகாரங்கள் விடுபட்டிருந்தால், அதையும் ஒரே கட்டளையிட்டுச் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும், நமக்கு வரும் இ.மெயில்களுக்கு தானாகவே பதில் கடிதத்தைத் தயாரிக்கும் வகையிலும் இந்தப் புதிய சேவை அமைந்துள்ளது. மாற்றங்கள் தேவையில்லை என்றாலும், பழைய கடிதத்தை அப்படியே பயன்படுத்தும் முறையும் வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக முறையில் பயன்படுத்தப்படும் இ. மெயில்களுக்கு முதலில் இந்தச் சேவையை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் அனைத்துப் பயன்பாட்டாளர்களுக்கும் இந்தச் சேவை வழங்கப்பட உள்ளது. இந்தப் புதிய சேவையைப் பெற ஜி.மெயிலில் கம்போஸ் - ஹெல்ப் மி ரைட் ஆப்சன் சென்று, ஜெமனி ஏ.ஐ.க்குத் தேவையான கட்டளைகளைப் பிறப்பித்து, இ.மெயில்களில் தேவையானவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இ. மெயில்களைத் தேடுவதிலும் அண்மையில் ஏ.ஐ.யை கூகுள் நிறுவனம் புகுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.