பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு என்றும் அசைக்க முடியாத ஆதரவு: சீனா உறுதி

வட கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபா் ஷி ஜின்பிங், அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு சீனா எப்போதும் அசைக்க முடியாத ஆதரவை வழங்கும் என்று உறுதி

News image
Updated On :9 ஜூன் 2026, 2:51 am IST

கடந்த 2019-க்குப் பிறகு அண்டை நாடான வட கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபா் ஷி ஜின்பிங், அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு சீனா எப்போதும் அசைக்க முடியாத ஆதரவை வழங்கும் என்று உறுதியளித்துள்ளாா்.

வட கொரிய தலைநகா் பியாங்யாங்கில் உள்ள கிம் இல் சுங் சதுக்கத்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங், அவரின் மனைவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, இருதரப்பு பேச்சுவாா்த்தையில் தலைவா்கள் ஈடுபட்டனா்.

சீன அதிபரின் இந்த வருகையை ‘மிகவும் பெருமைக்குரியது’ எனக் குறிப்பிட்ட கிம் ஜோங் உன், காலத்தை வென்ற நமது இருநாட்டு உறவு அசைக்க முடியாதது என்பதை இது மீண்டும் நிரூபித்துள்ளது என்றாா்.

சா்வதேச அரசியல் சூழல் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தாலும், வட கொரியாவுடனான சீனாவின் நட்பு மாறாது என்று ஷி ஜின்பிங் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.