பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!

ஓமன் கடல்பகுதியில் எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்த நிலையில் அதிலிருந்த 24 மாலுமிகளை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.

News image

ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படும் மாலுமிகள் - Video grab

Updated On :8 ஜூன் 2026, 8:53 pm IST

ஓமன் கடல்பகுதியில் எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்த நிலையில் அதிலிருந்த 24 மாலுமிகளை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.

ஓமன் கடற்பகுதியின் அருகில் பலாவ் நாட்டின் கொடியுடன் வந்த ‘எம்டி-மேவ்ரிக்ஸ்’ எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்தது.

மஸ்கட்டிற்கு தெற்கில் உள்ள கடல்பகுதியில் மதியம் 1.30 மணியளவில் தீப்பிடித்த தகவல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் பணியாற்றிய 24 இந்திய மாலுமிகளை மீட்டதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் கூறியுள்ளது.

கப்பலின் ஒரு பகுதி தாக்கப்பட்ட நிலையில் மாலுமிகள் அனைவரும் இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். இதுதொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஆனால், கப்பலில் உண்டான சேதம், தாக்குதல் நடத்தியது யார் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. அமெரிக்க ராணுவம் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தாக்குதல் நடத்தியிருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Summary

Oil tanker catches fire off the coast of Oman: Indian Navy rescues 24 crew members

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.