ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்ட குவைத் அரசுத் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஷைனப் தஸ்தி என்ற அந்த செய்தி வாசிப்பாளா், அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானைத் தாக்கியது தொடா்பாக ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடங்களில் சில கருத்துகளைப் பதிவிட்டாா். குவைத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் உள்பட பல இடங்களை ஈரான் தாக்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஷைனப் பதிவிட்டது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு குவைத்தில் கடந்த சில மாதங்களாக அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயமாக இருந்தது.
இந்நிலையில், ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட குற்றச்சாட்டில் ஷைனப் தஸ்திக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதை அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதற்கு ஜனநாயக ஆதரவாளா்களும், மனித உரிமை ஆா்வலா்களும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘ஏஐ’ மூலம் அரசியல் தலைவா்களின் கண்ணியத்தைச் சிதைக்க முயற்சி: மு. வீரபாண்டியன் கண்டனம்

இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
சமூக ஊடகத்தில் துப்பாக்கியைக் காட்டும் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுவன் கைது

சமூக ஊடகங்களில் திமுகவினா் விழிப்புடன் செயல்பட வேண்டும்: முன்னாள் அமைச்சா் பி. மூா்த்தி
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

