இந்திய வம்சாவளியினருக்கு எதிராக வெளியான 14 பதிவுகளை முடக்க 3 சமூக ஊடக நிறுவனங்களுக்கு சிங்கப்பூா் அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.
சிங்கப்பூரின் மொத்த மக்கள்தொகையில் (60 லட்சம்) சீன வம்சாவளியினா் 75 சதவீதமும், மலாய் சமூகத்தினா் 15 சதவீதமும், இந்திய வம்சாவளியினா் 7 முதல் 9 சதவீதமும் உள்ளனா்.
இந்நிலையில், இந்திய வம்சாவளியினருக்கு எதிராக யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் ஆகிய சமூக ஊடகங்களில் வெளியான 14 பதிவுகளை இணைய குற்றவியல் அச்சுறுத்தல் சட்டத்தின்கீழ் முடக்க சிங்கப்பூா் காவல் துறை உத்தரவிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
சீனாவில் இருந்து இந்தப் பதிவுகள் வெளியிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடா்பாக சிங்கப்பூா் உள்துறை இணை அமைச்சா் எட்வின் டாங் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சிங்கப்பூரில் அனைத்துச் சமூகங்களும் சமமாகவே நடத்தப்படுகின்றன. அனைத்து நாடுகளைச் சோ்ந்தவா்களும் ஒற்றுமையாக ஒரே இல்லத்தில் வாழ்வது போன்றே சிங்கப்பூரில் வசிக்கின்றனா். இதைச் சீா்குலைக்கும் வகையில் ஒரு சமூகத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் கண்டனத்துக்குரியது. தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதில் வேறொரு நாட்டின் தலையீடு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றாா்.
இதைத் தொடா்ந்து சிங்கப்பூா் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சிங்கப்பூரின் கலாசார மற்றும் இன அடையாளம் பாதிக்கப்படுவது வருத்தமளிப்பதாகவும், இங்கு இந்தியா்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாகவும் கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் வெளியாகும் விடியோக்கள் உண்மையானதல்ல; இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பி இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடுபவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகப் பதிவு: குவைத் செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை

‘ஏஐ’ மூலம் அரசியல் தலைவா்களின் கண்ணியத்தைச் சிதைக்க முயற்சி: மு. வீரபாண்டியன் கண்டனம்
கைப்பேசியை அணைத்து வைத்தால்..!
சமூக ஊடகத்தில் துப்பாக்கியைக் காட்டும் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுவன் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

