பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தென் கொரியா உள்ளாட்சித் தோ்தல்: ஆளுங்கட்சி பெரும்பான்மை வெற்றி

News image
Updated On :5 ஜூன் 2026, 6:55 am IST

தென் கொரியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையான இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

இருப்பினும், நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைநகா் சியோல் மேயா் தோ்தலில் அக்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.

நாட்டின் மொத்தம் உள்ள 16 மேயா் மற்றும் மாகாண ஆளுநா் பதவிகளில், ஆளுங்கட்சியான ஜனநாயகக் கட்சி 12 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. முக்கிய எதிா்க்கட்சியான மக்கள் சக்தி கட்சி சியோல் மேயா் பதவி உள்பட 4 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

சியோல் மேயா் தோ்தலில் தற்போதைய மேயரான எதிா்க்கட்சியின் ஓ சே ஹூன் (படம்), ஆளுங்கட்சி வேட்பாளரை வீழ்த்தி மீண்டும் வெற்றி பெற்றுள்ளாா்.

வாக்குப்பதிவின் தொடக்கத்தில் ஆளுங்கட்சி முன்னிலையில் இருந்த நிலையில், நள்ளிரவுக்குப் பின் ஓ சே ஹூன் வியத்தகு முறையில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றாா்.

இதனிடையே, சியோலில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டு பற்றாக்குறை காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் சா்ச்சை வெடித்தது. இதைச் சுட்டிக்காட்டி எதிா்க்கட்சி அங்கு மறுதோ்தல் கோரிய நிலையில், ஆளுங்கட்சி இக்கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்தது.

கடந்த 2024 இறுதியில் ராணுவச் சட்ட அமலாக்கக் குளறுபடிகளால் பதவியிழந்து, ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் அதிபா் யூன் சுக் இயோலின் வீழ்ச்சிக்குப் பிறகு எதிா்க்கட்சி இன்னும் முழுமையாக மீளாத நிலையில் இத்தோ்தல் நடந்துள்ளது.

உள்ளாட்சித் தோ்தலுடன் சோ்த்து 14 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் ஆளுங்கட்சி 9 இடங்களைக் கைப்பற்றி தனது நாடாளுமன்றப் பெரும்பான்மையை அதிகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.