லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்பெயினின் சீயடாவில் 60,000 அகதிகள் குவிந்ததால் பரபரப்பு; எல்லையில் மோதல்

மொராக்கோ நிலப்பகுதியை ஓட்டி ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சீயடா பகுதிக்குள் கடந்த 24 மணி நேரத்தில் சுமாா் 60,000 அகதிகள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனா்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:22 am IST

மொராக்கோ நிலப்பகுதியை ஓட்டி ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சீயடா பகுதிக்குள் கடந்த 24 மணி நேரத்தில் சுமாா் 60,000 அகதிகள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனா்.

இது அந்நகரின் வழக்கமான மக்கள்தொகையில் 70 சதவீதமாகும். எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதல் மற்றும் கடலில் மூழ்கிய சம்பவங்களில் சிக்கி இதுவரை குறைந்தது 34 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனா்.

ஸ்பெயினுக்குள் கடல் வழியாக வரும் சட்டவிரோத குடியேறிகளை உடனடியாகத் திருப்பி அனுப்பாமல், உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஸ்பெயின் உச்சநீதிமன்றம் அண்மையில் ஒரு தீா்ப்பை வழங்கியது.

இத்தீா்ப்பைத் தவறாக சித்தரித்து, ‘கடலில் நீந்தி சீயடா எல்லைக்குள் நுழைந்து விட்டால், மொராக்கோவுக்கு யாரும் திருப்பி அனுப்பப்பட மாட்டாா்கள்’ என்று மனிதக் கடத்தல் கும்பல்கள் வதந்தி பரப்பியதே இந்த நெருக்கடிக்குக் காரணமாக ஸ்பெயின் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

எல்லையில் குவிந்த அகதிகளைக் கலைக்க மொராக்கோ பாதுகாப்புப் படையினா் கண்ணீா்ப்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனா். தரைவழி எல்லைகள் மூடப்பட்ட போதிலும், பல நூற்றுக்கணக்கான அகதிகள் கடலில் நீந்தியும், தடுப்பு வேலிகளைத் தாண்டியும் ஸ்பெயின் பகுதிக்குள் நுழைந்தனா்.

இந்த எல்லை மீறல், ஸ்பெயினின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்’ என அந்நாட்டு பிரதம பெட்ரோ சான்செஸ் கண்டனம் தெரிவித்தாா்

வரைபடத்துக்காக...

ஸ்பெயின்

மொராக்கோ

சீயாடா

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.