லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்பெயின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பலியான சிறுவன்!

ஸ்பெயினின் மேற்கு பகுதியில் உலகக்கோப்பை வெற்றியைக் கொண்டாடுகையில் நீரூற்று சரிந்து விழுந்ததில் பதின்வயது சிறுவன் பலி.

ஸ்பெயின் வெற்றியை அந்த அணியின் ரசிகர்கள் ரோமின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்பானிஷ் படிக்கட்டுகளுக்கு முன்பாக கொண்டாடினர். - AP

Published On :20 ஜூலை 2026, 6:30 pm IST

ஸ்பெயின் அணி ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி கால்பந்து உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது. இந்த வெற்றி அந்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஸ்பெயினின் மேற்கு பகுதியில் உலகக்கோப்பை வெற்றியைக் கொண்டாடுகையில் நீரூற்று ஒன்று சரிந்து விழுந்ததில் பதின்வயது சிறுவன் பலியானார். இந்த நிகழ்வில் பலர் காயமடைந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்பெயினின் சுயூடாட் ரோட்ரிகோ நகரில் நடைபெற்ற இந்த விபத்தில் 13 வயது சிறுவன் பலியானதற்கு அரசு சார்பில் இரங்கலும் வருத்தமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணியைக் கொண்டாடும் நிகழ்வாக இருந்திருக்க வேண்டியது, ஒரு துயரச் சம்பவமாக மாறியுள்ளது என அரசு சார்பில் வெளியான இரங்கல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் நீரூற்று சரிந்து விழுந்ததாக மீட்புப் பணிகள் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு தேவைபட்டோருக்கு உதவிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மக்கள் பலரும் ஸ்பெயினின் வெற்றியைக் கொண்டாடுகையில் நீருற்றின் மீது ஏறியதால், அது இடிந்து விழுந்துள்ளது.

ஸ்பெயினில் கால்பந்து விளையாட்டின் மீதான மோகம் அதிகம். 2010-க்குப் பின்னர் ஸ்பெயின் அணி உலகக்கோப்பையை வென்றதைத் தொடர்ந்து அங்கு நாடு முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டுள்ள நிலையில் இச்சம்பவம் அங்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Boy dies during Spain victory celebrations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.