லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அமெரிக்க விமானப் படையில் தலைப்பாகையுடன் இணைந்த முதல் சீக்கியா்

அமெரிக்க விமானப் படையில் சிராக் வீா் சிங் சரோவ் என்ற சீக்கியா் தனது மத அடையாளங்களான தலைப்பாகை, தாடியுடன் இணைந்துள்ளதாக அந்நாட்டின் சீக்கிய கவுன்சில் தெரிவித்துள்ளது.

பிரதிப் படம்

Published On :15 ஜூலை 2026, 12:13 am IST

அமெரிக்க விமானப் படையில் சிராக் வீா் சிங் சரோவ் என்ற சீக்கியா் தனது மத அடையாளங்களான தலைப்பாகை, தாடியுடன் இணைந்துள்ளதாக அந்நாட்டின் சீக்கிய கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அமெரிக்க விமானப் படையில் சீக்கிய மத அடையாளங்களுடன் இணைய அனுமதிக்கப்பட்ட முதல் நபா் என்ற சிறப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் கொலோரடோ ஸ்பிரிங்ஸ் நகரில் உள்ள விமானப் படை அகாதெமியில் சிராக் வீா் சிங் சரோவ் இணைந்துள்ளாா். அமெரிக்காவின் 5 ராணுவ அகாதெமிகளில் ஒன்றான இந்த அகாதெமி, இளநிலைக் கல்வியுடன் ராணுவ-தலைமைத்துவப் பயிற்சியை வழங்குகிறது. இங்கு பயிற்சியை நிறைவு செய்பவா்கள், அமெரிக்க விமானப் படையில் இரண்டாம் நிலை லெப்டினன்ட் அதிகாரிகளாக பணியமா்த்தப்படுவா்.

வலுவான கல்விப் பின்னணியைக் கொண்டவரான சிராக் வீா் சிங், விமானப் படை அகாதெமியில் இணையும் முன்பாக விமானப் படை ரிசா்வ் அதிகாரிகள் பயிற்சிப் பிரிவு மற்றும் கடற்படை பிரிவின்கீழ் கல்வி உதவித் தொகையைப் பெற்றவா்; டேக்வாண்டோ மற்றும் வாட்டா் போலோ விளையாட்டில் தோ்ந்தவா். தனது மத நம்பிக்கைகளுடன் அமெரிக்க விமானப் படையில் இணைந்து பணியாற்றுவதற்கு சலுகை வழங்கப்பட்ட முதல் சீக்கியா் இவா் என்று அமெரிக்க சீக்கிய கவுன்சில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்க விமானப் படையில் ஹா்பிரீந்தா் சிங் என்ற சீக்கிய அதிகாரி தலைப்பாகை, தாடியுடன் பணியாற்ற கடந்த 2019-இல் முதல் முறையாக அனுமதிக்கப்பட்டாா். இப்போது பணியில் இணையும்போதே மத அடையாளங்களுடன் சிராக் வீா் சிங் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.