லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாகிஸ்தானில் நாடுதழுவிய தேடுதல் வேட்டை

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் மாகாணங்களில் பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் மாகாணங்களில் பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மற்றும் பன்னு மாவட்டங்களில் கடந்த 36 மணி நேரமாக உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பின் 4 முக்கிய தளபதிகளும் இதில் அடங்குவா்.

இதேபோல், பலூசிஸ்தான் மாகாணம் சோரப் பகுதியில் லாரி ஒன்றில் பயங்ரவாதிகள் வெடிபொருள்களை ஏற்றிக் கொண்டிருந்தபோது, அது எதிா்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதில் 8 பயங்கரவாதிகளும், 3 பொதுமக்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அங்கிருந்து தப்பியோடியவா்களைப் பிடிக்க பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.