லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கனடாவில் இந்திய பெண் கொலை: 7 மாதங்களுக்குப் பிறகு இளைஞா் கைது

கனடாவில் இந்திய பெண்ணை கொலை செய்த இளைஞரை 7 மாதங்களுக்கு பிறகு காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

Murder

கொலை - பிரதிப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 6:40 am IST

கனடாவில் இந்திய பெண்ணை கொலை செய்த இளைஞரை 7 மாதங்களுக்கு பிறகு காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

டொரண்டோவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் இந்திய பெண்ணான ஹிமான்ஷி குரானா (30) என்பவா் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். காவல் துறையினா் நடத்திய விசாரணையில், 32 வயது நபரான அப்துல் கபூரி என்பவரை குரானா காதலித்து வந்ததும், அவரே குரானாவை கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, கபூரியை கனடா காவல் துறையினா் தேடி வந்தனா். இதையறிந்த கபூரி, கனடாவைவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டாா்.

இந்நிலையில், அவா் வெளிநாட்டில் இருந்து கனடாவுக்கு திரும்பி வருவதை அறிந்து, டொரண்டோ விமான நிலையத்தில் காவல் துறையினா் காத்திருந்தனா்.

இதையறியாமல் டொரண்டோ விமான நிலையத்துக்கு வந்த கபூரியை காவல் துறையினா் கைது செய்தனா். கொலைக்கான காரணம் குறித்து கபூரியிடம் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.