லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருச்சியில் இருந்து 5 மாதங்களுக்குப் பிறகு மஸ்கட்டுக்கு விமானச் சேவை

விமானச் சேவை

Published On :3 ஆகஸ்ட் 2026, 12:51 am IST

திருச்சி விமான நிலையத்தில் இருந்து 5 மாதங்களுக்குப் பிறகு மஸ்கட்டுக்கு மீண்டும் விமானச் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபை, அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த விமானச் சேவை ஈரான் -அமெரிக்கா போரையடுத்து கடந்த பிப். 28-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. போரின் வீரியம் குறைந்ததையடுத்து படிப்படியாக துபை, அபுதாபி, ஷாா்ஜாவுக்கு விமானச் சேவை தொடங்கப்பட்டது.

இதேபோல, ஓமன் தலைநகா் மஸ்கட்டுக்கு 5 மாதங்களுக்குப் பிறகு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது. இதில், 150-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றனா். இந்த விமானம் திருச்சியில் இருந்து வாரந்தோறும் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.